ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான பயனற்ற அரசாங்கம் உடனடியாக வீட்டுக்குச் செல்ல வேண்டுமென வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமான போராட்டத்தின் உன்னதமான குறிக்கோள்களை அடைவதற்காக, பல்லாயிரக்கணக்கான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில், வாத விவாதங்களுக்கு மத்தியில் அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களின் பன்மைத்துவத்திற்கும் தலைவணங்கி, உடன்பாடுகளுக்கு உடன்பட்டும், மாற்றுக் கருத்துக்களான உரிமையை பாதுகாத்தும், இணைபிரியா சகோதரத்துவத்துடனும், ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும் தயாரிக்கப்படும் ஆவணம், இரண்டாயிரத்து இருபத்திரண்டு யூலை மாதம் ஐந்தாம் திகதி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் மக்கள்மயப்படுத்தப்பட்ட செயற்பாட்டு திட்டம் இதுவாகும்.
- கோட்டாபய ராஜபக்ச அவர்கள் உடனடியாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும்.
- ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ஷக்கள் உள்ளடங்கிய அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும். (அமைச்சரவை – அமைச்சரவையற்ற – பிரதி – கருத்திற்ற போன்ற அனைத்து அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், ஆலோசகர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபன தலைவர்கள், தூதுவர்கள் உள்ளிட்டவர்களில்)
- கோட்டா – ரணில் அரசாங்கம் விலகிய பின்னர் மக்கள் போராட்டத்தின் பொருளாதார, சமூக, அரசியல் நோக்கங்கள் மற்றும் விருப்பங்கள் உள்ளடங்கலாக இடைக்கால ஆட்சி உருவாக்கப்படல் வேண்டும்.
மக்கள் போராட்டத்தின் பிரதிநிதிகளுக்கு குறித்த இடைக்கால ஆட்சியில் சட்ட ரீதியா பிணைப்புடன் கூடிய அழுத்தங்கொடுக்க கூடிய தலையீடுகளை மேற்கொள்ளக்கூடிய
பொதுமக்கள் பேரவை நிறுவப்படல் வேண்டும்.
3.1 பொருளாதார நெருக்கடிகளால் அழுத்தங்களுக்குள்ளாகிய மக்களை
அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு குறுகியகால துரித நிவாரண வேலைத்திட்டத்தை தயாரித்தல்.
• உணவு, எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்கள், கல்வி வசதிகள், சுகாதார வசதிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி போன்ற வசதிகளை வழங்குவதற்கு வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்.
• நுண்நிதி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல்.
• லீசிங் மற்றும் சிறு வியாபாரக் கடன்களை தள்ளுபடி செய்தல் அல்லது மீள்கொடுப்பனவுகளுக்கான சலுகை
திட்டங்களை தயாரித்தல்.
3.2 தற்போதைய கைது. செய்யப்பட்டுள்ள அமைதிமுறையிலான போராட்டக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகியவர்களுக்கு நிதி வழங்குவதற்கான பொறிமுறையைத் தயாரித்தல்.
3.3 கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கல்களால் பாதிக்கப்பட்ட
அனைவருக்கும் நீதி வழங்கும்
பொறிமுறையைத் தயாரித்தல்.
3.4 ராஜபக்ஷக்களால் திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீண்டும் விசாரணையுடன் கூடிய கணக்காய்வின் மூலம் அரசுக்கு கையகப்படுத்தல் மற்றும் தண்டனை வழங்கல்.
• அரசியல்வாதிகள் முறையற்ற வைகையில் ஈட்டிய சொத்துக்கள்.
• அதிக இலாபமீட்டும் கம்பனிகளால் செலுத்த தவறிய வரிப்பணம்.
• அரசியல் அனுசரணையுடன் கம்பனிகள் மற்றும் நபர்கள் நியாயமற்ற வைகையில் ஈட்டிய பணம் மற்றும் சொத்துக்கள்.
3.5 தற்போது நிலவுகின்ற அரச வரிமுறையை (85.15) முழுமையாக மாற்றியமைத்து மறைமுகவரி வீதத்தை குறைத்தல், நேரடி வரி வீதத்தை அதிகரித்தலையும் நோக்கமாகக் கொண்டு முறையற்ற வரிமுறையின் கீழ் அதிக இலாபமீட்டும் கம்பனிகள் மற்றும் வர்த்தகர்களிடமிருந்து அதிக வரியை அறவிடக்கூடிய வகையிலான
வரிக்கொள்கையை மாற்றியமைத்தல்.
- கோட்டாபய அவர்களை பதவியிலிருந்து விலக்கிய பின்னர் மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றும் வரைக்கும்,
• நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல்.
• சட்டத்தை அனைவருக்கும் சமமாக்குதல்.
• ஜனநாயக கட்டமைப்புகளை வலுப்படுத்தல், போன்றவற்றுக்காக தற்போது காணப்படும் அரசியலமைப்பில் மேற்கொள்ளக்கூடிய ஜனநாயக மறுசீரமைப்புக்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
- மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பை மக்கள் தீர்ப்பின் மூலம் துரிதமாக நிறைவேற்றுதல் வேண்டும்.
• உயிர் வாழும் உரிமையை அடிப்படை மனித உரிமையாக அடையாளப்படுத்துதல்.
• நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்தல்.
• நீதியான தேர்தல்களை நடாத்துவதற்கு ஏற்புடைய சரியான பொறிமுறைகளை தயாரித்தல்.
• மக்களுக்கு பொறுப்பு கூறாத மக்கள் பிரதிநிதிகளை மீள அழைப்பதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்தும் பொறிமுறையொன்றை உருவாக்கல்.
• சட்டவாக்கம், சட்ட திருத்தங்களின் போது மக்கள் பங்கேற்றக்கூடிய பொறிமுறையொன்றை தயாரித்தல்.
• மனித உரிமைகள், பெண்கள் மற்றும் சிறுவர உரிமைகளை வலுப்படுத்துவதற்காக தற்போதுள்ள மட்டுப்பாடுகளை நீக்குகின்ற வகையிலான உறுப்புரைகளை உட்சேர்த்தல்.
• கல்வி, சுகாதாரத்திற்காக மக்களுக்குள் உரிமையை உறுதிப்படுத்தல்.
• அபிவிருத்தி எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றாடல் அழிப்புக்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் சுற்றாடல் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது விஞ்ஜான ரீதியான பொறிமுறைகளை கடைப்பிடிப்பதை கட்டாயமாக்கல்.
• இனவாதம், தேசிய ரீதியான அழுத்தங்களை முழுமையாக இல்லாது செய்து சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும், சகல இனத்தவர்களதும் மதம், மொழி, பால் மற்றும் ஏனைய கலாச்சார தனித்துவ அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அடிப்படை சட்டங்களை பலப்படுத்தல்.
• குறித்த சதவீத மக்களால் கோரப்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் தீர்ப்பை கோருவதற்கான அதிகாரத்தை உறுதிப்படுத்தல்.
- இடைக்கால ஆட்சியின் அடிப்படை நோக்கங்களாக, மேற்படி முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அவ்வாறு உருவாக்கப்படும் இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பு 12 மாதங்கள் உயர்ந்தபட்ச காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் மூலம் நிறைவு செய்யப்படல் வேண்டும்.
• அதற்கமைய, மேற்படி 3, 4 உறுப்புரைகளை துரித தேவையாகக் கருதி உயர்ந்தபட்சம் (06) ஆறு மாதங்களில் நிறைவேற்றப்படல் வேண்டும்.
• மேலும், மேற்படி 5 ஆம் உறுப்புரை
உயர்ந்தபட்சம் 12 மாதங்களில்
நிறைவேற்றப்படல் வேண்டும்.
• மேற்படி அனைத்தும் நிறைவேற்றப்படும் வரைக்கும் மக்கள் போராட்டம் புதிய பரிமாணத்தில் மேற்கொள்ளப்படும்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்
2022.07.05
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்
Add comment